பார்ம் டூ ேஹாம் திட்டம்: துணை சபாநாயகர் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பார்ம் டூ ேஹாம்' திட்டம்: துணை சபாநாயகர் உறுதி

Added : ஏப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் துணை சபாநாயகர் ஜெயராமன், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி, நல்லட்டிபாளையம், பட்டணம், மார்ச்சநாயக்கனுார், தாமரைகுளம் ஊராட்சிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கி ஓட்டு சேகரித்தார்.மேற்கு ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம், நகர விவசாய அணி
 'பார்ம் டூ ேஹாம்' திட்டம்:  துணை சபாநாயகர் உறுதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் துணை சபாநாயகர் ஜெயராமன், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி, நல்லட்டிபாளையம், பட்டணம், மார்ச்சநாயக்கனுார், தாமரைகுளம் ஊராட்சிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கி ஓட்டு சேகரித்தார்.மேற்கு ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம், நகர விவசாய அணி செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.துணைசபாநாயகர் பேசுகையில், ''பொள்ளாச்சி பகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, வெற்றி பெற்றதும், 'இ -காமர்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்தும், 'பார்ம் டூ ேஹாம்' திட்டம் நிறைவேற்றப்படும்.விவசாய விளைபயிர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். கால்நடைகளுக்காக, 20 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X