திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் தி.மு.க., வேட்பாளர் பொன்முடி கூட்டணி கட்சியினருடன் வீதி, வீதயாக ஊர்வலமாக சென்று தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பொன்முடி கூட்டணிக் கட்சிகளான காங்., வி.சி., மா.கம்யூ., இந்திய கம்யூ., உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுவதும் சென்று ஓட்டு சேகரித்தார்.பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு பொன்முடி தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தனது இறுதிகட்ட பிரசாரத்தை ஏரிக்கரை மூலையில் இருந்து துவக்கினார்.கூட்டணி கட்சி முக்கியஸ்தர்களுடன் திறந்த ஜீப்பில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஐந்துமுனை சந்திப்பிற்கு சென்றார். அங்கு தொகுதி வளர்ச்சிக்கான தான் மேற்கொள்ள உள்ள பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE