அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி வளர்ச்சி அடைய வாய்ப்பு தாருங்கள்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : மக்களும், தொகுதியும் வளர்ச்சியடைய தி.மு.க.,வை ஆதரியுங்கள் என்று பிரசாரத்தை நிறைவு செய்து ரிஷிவந்தியம் தி.மு.க வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார். ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று மாலை 6;45 மணிக்கு கட்சியினருடன் ஊர்வலமாக சென்று சூளாங்குறிச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.அப்போது அவர்

தியாகதுருகம் : மக்களும், தொகுதியும் வளர்ச்சியடைய தி.மு.க.,வை ஆதரியுங்கள் என்று பிரசாரத்தை நிறைவு செய்து ரிஷிவந்தியம் தி.மு.க வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று மாலை 6;45 மணிக்கு கட்சியினருடன் ஊர்வலமாக சென்று சூளாங்குறிச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். தொகுதி வளர்ச்சியடைய தி.மு.க.,வை ஆதரியுங்கள். என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் நன்றியோடு உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன்.பிரசாரத்திற்கு ஒத்துழைப்பு அளித்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க., பாண்டுரங்கன், பெருமாள், தொழிலதிபர் செந்தில்குமார், காங்., கிருபானந்தம், முருகன், இ.கம்யூ., சுப்பிரமணியன், ரவி, மா.கம்யூ., பழனி, ராஜவேல், ம.தி.மு.க., சேட்டு, சேகர், வி.சி., வேலுமணி, தர்மலிங்கம், பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அமிர்தவள்ளி கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, பாரதிதாசன், ராஜேந்திரன் அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் ரஞ்சித், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X