கள்ளக்குறிச்சி : புக்கிரவாரியில் ஆலங் கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. தொடர்ந்து மேக மூட்டம் நிறைந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியதால், மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தில் பலத்த மழையுடன் ஆலங்கட்டி விழுந்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்து அதை சேகரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE