அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நலனுக்கு உண்மையாக உழைப்பேன்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நலனுக்கு உண்மையாக உழைப்பேன் என்று வசந்தம் கார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் கூறினார். ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் கூறியதாவது: ரிஷிவந்தியம் தொகுதி அனைத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்ததை மாற்றி முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் இங்கு போட்டி யிட்டு

தியாகதுருகம் : ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நலனுக்கு உண்மையாக உழைப்பேன் என்று வசந்தம் கார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் கூறியதாவது: ரிஷிவந்தியம் தொகுதி அனைத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்ததை மாற்றி முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் இங்கு போட்டி யிட்டு வெற்றி பெற்றேன். ஆனால் தி.மு.க., ஆட்சி அமையாததால் எதிர்பார்த்த வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை என்ற மன வேதனையில் இருந்தேன்.இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு நான் சட்டசபையில் முன்வைத்த திட்டங்களை அ.தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.

இதனை தொகுதி மக்கள் நன்கு உணர்ந்துள்ளதால் என் மீது அன்பு குறையாமல் நம்பிக்கை வைத்துள்ளனர். இதை பிரசாரத்திற்கு செல்லும்போது அவர்களின் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சியை பார்த்து உணர்ந்தேன். இருப்பினும் தொடர்ந்து போராடி பல நலத்திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளேன். வரும் தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறுவது உறுதி. தலைவர் ஸ்டாலின் முதல்வரானதும் இத்தொகுதி பன்மடங்கு வளர்ச்சி அடைய மீண்டும் என்னை வெற்றிபெற செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து வாக்குறிதிகளையும் முழுமையாக நிறைவேற நான் பாடுபடுவேன்.என் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ள தொகுதி மக்களின் நலனுக்கு உண்மையாக உழைப்பேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று வசந்தம் கார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X