பொது செய்தி

தமிழ்நாடு

உரிமம் இன்றி தென்னங்கன்று விற்பனை: விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தமிழக - கேரள மாநில எல்லையில், எவ்வித உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் தென்னங்கன்று களை வாங்கி, ஏமாற வேண்டாம் என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை நடவு பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, தரமான சான்று பெற்ற விதைகள், உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விற்பனை

பொள்ளாச்சி:தமிழக - கேரள மாநில எல்லையில், எவ்வித உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் தென்னங்கன்று களை வாங்கி, ஏமாற வேண்டாம் என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை நடவு பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, தரமான சான்று பெற்ற விதைகள், உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் விற்பனை உரிமம் பெற்ற, 15 தனியார் நாற்று பண்ணைகள் மற்றும் அரசு நாற்று பண்ணைகள் இரண்டும் செயல்படுகின்றன.இவைகளில், நெட்டை குட்டை, குட்டை நெட்டை, சாவக்காடு ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, அரசம்பட்டி நெட்டை, பொள்ளாச்சி நெட்டை, கங்கபாண்டம், ராம்கங்கா போன்ற தென்னை ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த பண்ணைகள், விதை ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. கொள்முதல் பட்டியல், சொந்த உற்பத்தி எனில் தாய் மரங்களின் தன்மை மற்றும் ஒட்டுகட்டும் முறைகள் ஆகியன ஆய்வு செய்யப்பட்ட பிறகே, விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.எனவே, விவசாயிகள் தென்னை நடவு செய்யும்போது, விதை விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் மட்டுமே, விற்பனை பட்டியலுடன் தென்னங்கன்றுகளை வாங்க வேண்டும்.தென்னை பல்லாண்டு பயிர் என்பதால், தென்னங்கன்றுகள் தகுந்த ஆதாரங்களுடன் மட்டுமே வாங்க வேண்டும். பொள்ளாச்சியின் மேற்கு பகுதியில், கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக கிராமங்களில், எவ்வித உரிமமும் பெறாமல், தென்னங்கன்றுகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வித விற்பனையாளர்களிடம் தென்னங்கன்றுகள் வாங்கி, விவசாயிகள் ஏமாற வேண்டாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X