சங்கராபுரத்தில் அனல்காற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் அனல்காற்று

Added : ஏப் 04, 2021
Share
சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலுக்கு பயந்து பொது மக்கள் காலை

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலுக்கு பயந்து பொது மக்கள் காலை முதல் மாலை வரை வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வயதான முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X