அக்ஷய் குமாருக்கு கொரோனா
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 53, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தன் வீட்டில், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதை, 'டுவிட்டர்' வாயிலாக தெரிவித்த அக்ஷய் குமார், 'கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும், கொரோனா வைரசுக்கான மருத்துவப் பரிசோதனைகளை செய்துக் கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளார்.பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கு தடுப்பூசி
புதுடில்லி: கடந்த மார்ச், 1ம் தேதி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தடுப்பூசியின் முதல், 'டோஸை' செலுத்திக் கொண்டார். இந்நிலையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தடுப்பூசியின் இரண்டாம் டோஸ், அவருக்கு நேற்று செலுத்தப்பட்டது. இதன் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' வெளியிட்ட வெங்கையா நாயுடு, தகுதியுள்ள அனைவரும், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
உத்தர பிரதேச அரசுக்கு கடிதம்
சண்டிகர்: உத்தர பிரதேசத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி, மற்றொரு வழக்கில், பஞ்சாபின் ரூப்நகர் மாவட்ட சிறைச்சாலையில், 2019 முதல் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, அன்சாரியை, உத்தர பிரதேசத்தின் பாந்தா சிறைச்சாலைக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இது தொடர்பாக, உ.பி., அரசுக்கு, பஞ்சாப் உள்துறை அமைச்சகம், நேற்று கடிதம் எழுதியது. அதில், வரும், 8ம் தேதிக்குள், முக்தார் அன்சாரியை, உ.பி.,க்கு காவலில் அழைத்துச் செல்லுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பரூக் உடல் நலம்: கவர்னர் விசாரிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, ஸ்ரீநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு, நேற்று நேரில் சென்ற, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, அவரது மகன் ஒமர் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார். பரூக் அப்துல்லாவின் உடல்நிலை குறித்து, அவரிடம் கேட்டறிந்தார்.
அக்ஷய் குமாருக்கு கொரோனா
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 53, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தன் வீட்டில், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதை, 'டுவிட்டர்' வாயிலாக தெரிவித்த அக்ஷய் குமார், 'கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும், கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE