சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவகைகள் கடத்தல் :சோதனையில் சிக்கியது

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், 'சில்லிங்' விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட மது வகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.வால்பாறையில் சமீப காலமாக, 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடக்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் 'சில்லிங்' விற்பனை நடக்கிறது.இந்நிலையில்,
 மதுவகைகள் கடத்தல் :சோதனையில் சிக்கியது

வால்பாறை:வால்பாறையில், 'சில்லிங்' விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட மது வகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.வால்பாறையில் சமீப காலமாக, 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடக்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் 'சில்லிங்' விற்பனை நடக்கிறது.இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வால்பாறை - நடுமலை ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது, காரில், 185 மது பாட்டில்கள் 'சில்லிங்' விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மது பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள், வால்பாறை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, மது பாட்டில் கடத்திய பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்த காட்டுத்துரை,41, ஆனந்தராஜ்,31, ஆகிய இருவரை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X