அரசியல் செய்தி

தமிழ்நாடு

இறுதி கட்ட பிரசாரம்; வேட்பாளர்கள் 'பிஸி'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், இறுதி கட்ட பிரசாரத்தில், அ.தி.மு.க., - இ.கம்யூ., வேட்பாளர்கள் களமிறங்கி, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் அமுல்கந்தசாமி, எஸ்டேட் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து, 'என்னை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தால், நீண்ட நாளைய சம்பள பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.'சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை
 இறுதி கட்ட பிரசாரம்; வேட்பாளர்கள் 'பிஸி'

வால்பாறை:வால்பாறையில், இறுதி கட்ட பிரசாரத்தில், அ.தி.மு.க., - இ.கம்யூ., வேட்பாளர்கள் களமிறங்கி, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் அமுல்கந்தசாமி, எஸ்டேட் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து, 'என்னை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தால், நீண்ட நாளைய சம்பள பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.'சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்வேன், வன விலங்கு -மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காண்பேன்,' என, வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தார். வேட்பாளருடன் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கஸ்துாரி, ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தி.மு.க.. கூட்டணியில், இ.கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம், அட்டகட்டி, காடம்பாறை, வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரித்தார்.கீழ்பூனாஞ்சி, வெள்ளிமுடி, கருமுட்டி, காடம்பாறை உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் பேசும் போது, 'நான் வெற்றி பெற்றதும், உங்களது அடிப்படை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். குறிப்பாக, ரோடு போடவும், வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.வேட்பாளருடன் தி.மு.க., நகர பொறுப்பாளர் பால்பாண்டி, இ.கம்யூ., கட்சி தாலுகா பொதுசெயலாளர் மோகன், மா.கம்யூ., தாலுகா பொதுசெயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வருகையால், களத்தில் அனல் பறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X