பொது செய்தி

தமிழ்நாடு

தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் : கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், ஈஸ்டர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இயேசு கிறிஸ்து பிறந்து மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 40 நாட்களாக விரதம் இருந்து துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டது. ஆலய பீடம் பூக்களாலும், மின் விளக்குகளாலும் உயிர்த்த இயேசுவின் சொரூபம்
 தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் : கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், ஈஸ்டர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இயேசு கிறிஸ்து பிறந்து மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 40 நாட்களாக விரதம் இருந்து துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டது. ஆலய பீடம் பூக்களாலும், மின் விளக்குகளாலும் உயிர்த்த இயேசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு உயிர்ப்பு ஞாயிறு கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி புனித லுார்து அன்னை தேவாலயத்தில் அருட்பணி பங்குத் தந்தை ஜேக்கப் அடிகளார் மற்றும் தலைமையிட அருட்தந்தை கிருபாகரன் தலைமையில் நேற்று முன்தினம், இரவு, 11:30 மணிக்கு துவங்கி, அதிகாலை 2:00 மணி வரை ஈஸ்டர் பெருவிழா கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.இந்த வழிபாட்டில், புதிய தீர்த்தம் மந்திரித்தல், புது நெருப்பு மந்திரித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈஸ்டர் பெருவிழாவில், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பங்கேற்றனர். ஈஸ்டர் பெருவிழா மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் தெரிவித்து சிறப்பித்தனர்.வால்பாறைவால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டம் நடந்தது.
இதே போன்று, வால்பாறை ஆர்.சி., சர்ச்சில் ஆலய பங்கு தந்தை மரியஜோசப் தலைமையில் சிறப்பு பாடற்பலி, ஆராதனை நடந்தது. கோ -ஆப்ரேட்டிவ் காலனி சென்லுக் சர்ச்சில் ஆலய பங்கு தந்தை ஷாஜி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை கூட்டம், பாடற்பலி நடந்தது. ரொட்டிக்கடை புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி ஆலயம், முடீஸ், சிறுகுன்றா, சோலையாறுநகர் உள்ளிட்ட சர்ச்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு ஜெயக்கூட்டம் நடந்தது.உடுமலைஉடுமலை சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், திரளானவர்கள் பங்கேற்றனர். இதே போல், உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள, பிற கிறிஸ்தவ தேவாலயங்களிலும், சிறப்பு திருப்பலி நடந்தது.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X