சென்னை: சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தபடியாக, இரண்டாம் நிலை நகரங்களில், புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, கட்டுமான துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களை முன்னிலைப்படுத்தி, 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்கள், புதிய திட்டங்களை செயல்படுத்துகின்றன. வணிக ரீதியான வளர்ச்சி, புதிதாக மக்கள் குடியேறுவது அதிகம் என்பதால், இந்நகரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.இதற்கு அடுத்தபடியாக, திருச்சி, மதுரை, நெல்லை நகரங்களிலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்கின்றன.
ஆனால், இதில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடாமல் இருந்து வருகின்றன.கொரோனா பரவல் காலத்தில், மக்கள் இடம் பெயர்வதில் ஏற்பட்ட பிரச்னைகளால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சில அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளன. இதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் இறங்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: கொரோனா பரவல், ஊரடங்கு காலத்தில், மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதில், பல்வேறு புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், மாவட்ட தலைநகரங்கள் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில், புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.குறிப்பாக, நான்கு முதல் ஆறு லட்சம் மக்கள் தொகை உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் குடியிருப்புகள் கட்டினால், விற்பனைக்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டுள்ளன.இதில் தெரிய வந்த வழிமுறைகள் அடிப்படையில், தேர்தலுக்கு பின் புதிய திட்டங்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE