பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தேர்தலையொட்டி அனைத்து கடைகளுக்கும் முழு விடுமுறை அளிக்க வட்டார சிறு வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அறிக்கை:பொள்ளாச்சியில், நாளை நடக்கும் பொதுத்தேர்தலில், அனைவரும் தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டும். ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும். இதற்காக, தேர்தல் நாளான நாளை, 6ம் தேதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முழு விடுமுறை அளிக்கப்படுகிறது.தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE