ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ-மெயில்: 'லீக்' ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (116)
Advertisement
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி
DMK, MK Stalin, Stalin, TN elections 2021, திமுக, ஸ்டாலின்

சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று, தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தின், முக்கிய அதிகாரி ஆனந்த் திவாரி என்பவர், மார்ச், 28ம் தேதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்பபடும், இ - மெயில் ஒன்றை, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.


இ - மெயிலில் கூறப்பட்டிருந்த தகவல்:

தமிழக தேர்தலில், தி.மு.க., தோல்வி அடையும் நிலையில், கள நிலவரம் உள்ளது. தி.மு.க., - எம்.பி., ராசாவின் பேச்சு, தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களாக நடத்திய கருத்து கணிப்பில், தி.மு.க.,வை சேர்ந்த பெண்கள் உட்பட அனைத்து பெண்களும், தி.மு.க.,வுக்கு எதிரான மனப்பான்மையில் உள்ளது தெரிய வந்துள்ளது.நண்பர்கள் வழியே, கருத்து கணிப்புகளை, நமக்கு சாதகமாக மாற்ற எடுத்த, அனைத்து முயற்சிகளும், நம் கட்சி தலைவர்களின் பேச்சால் வீணாகி விட்டன.

கடும் போட்டிக்கு இடையில், தற்போது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, உடனடியாக, ராசா, பத்திரிகையாளர்களை அழைத்து, முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ராசாவை அழைத்து, கட்சி தலைமை கண்டித்து, பெண்களிடம் நற்பெயர் வாங்க முயற்சிக்க வேண்டும். ராசாவை, இனிமேல் பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அனைத்து நிர்வாகிகளும், பெண்களுக்கு எதிரான விஷயங்களை பேச அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த, இ - மெயிலில், கருத்து கணிப்புகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற எடுத்த முயற்சி என, குறிப்பிட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இ - மெயில், ஆலோசனை நிறுவனத்தை சேர்ந்த ஒருவரால், பா.ஜ., தரப்புக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன் உண்மைத் தன்மை தெரியாத நிலையில், தி.மு.க., தரப்பில், 'அது போலி' என்று மறுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஏப்-202109:42:23 IST Report Abuse
Bharathi டோப்பாவை விட ஒரிஜினல் முடியே பரவாயில்லை.
Rate this:
Cancel
kothhu barotta - Ariyalur,இந்தியா
12-ஏப்-202107:06:06 IST Report Abuse
kothhu barotta பிரசாந்த் கிஷோர் பிஜேபி ஆளுன்னு இன்னும் புரியலையா ? உபீஸுக்கு, மே இரண்டாம் தேதி நல்லா புரியும்
Rate this:
Cancel
bihar pulavar - kopvaalavaram,இந்தியா
12-ஏப்-202106:31:09 IST Report Abuse
bihar pulavar ஐயோ வடயோட கூட முன்னூத்து என்பது கொடியும் போச்சே ஐயோ பிஹாரி வேலைய காமிச்சுட்டானே ஏய் எலக்சன் புலவா என் முன்னாடி வா அவன் வரமாட்டான் வரமாட்டான் வேணும் வேணும் எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். ஐயா ஷோக்கா இப்படி புலம்பு வெச்சுட்டு எங்கேயோ போயிட்டானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X