பொது செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கு நாளை 'ஊபர்' இலவச சேவை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நாளை ஓட்டுச்சாவடிக்கு சென்று வர, 'ஊபர்' நிறுவனம் இலவச பயண சேவையை வழங்க உள்ளது.தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்து, நாளை ஓட்டுச்சாவடிக்கு செல்லவும், மீண்டும் வீடு திரும்பவும், இலவச பயண சேவையை தர, 'ஊபர்' நிறுவனம், தேர்தல் கமிஷனுடன் இணைந்து செயல்பட முன் வந்துள்ளது.நாளை,

சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நாளை ஓட்டுச்சாவடிக்கு சென்று வர, 'ஊபர்' நிறுவனம் இலவச பயண சேவையை வழங்க உள்ளது.தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்து, நாளை ஓட்டுச்சாவடிக்கு செல்லவும், மீண்டும் வீடு திரும்பவும், இலவச பயண சேவையை தர, 'ஊபர்' நிறுவனம், தேர்தல் கமிஷனுடன் இணைந்து செயல்பட முன் வந்துள்ளது.

நாளை, சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில், ஊபர் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இந்நகரில் உள்ள, மேற்குறிப்பிட்ட வாக்காளர்கள், குறைந்தபட்சம், 5 கி.மீ.,க்குள், ஓட்டுச்சாவடிக்கு சென்று வர, கட்டண அளவில், 200 ரூபாய் வரை இலவச சேவை வழங்கப்பட உள்ளது.சவாரி செய்வோர், மொபைல் போனில், 'ஊபர் மொபைல் ஆப்' வழியே, இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.இந்த வாய்ப்பை, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பயன்படுத்திக் கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X