தொடர்ந்து உயர்கிறது இளநீர் கொள்முதல் விலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து உயர்கிறது இளநீர் கொள்முதல் விலை

Added : ஏப் 04, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இந்த வாரமும் இளநீர் பண்ணை விற்பனை விலையை, ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:தமிழகம் முழுவதிலும் கோடை வெயில் கொளுத்துவதால், இளநீர் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம், இதனால், தொடர்ந்து விலை உயர்ந்து வருவதுடன், வடமாநில பகுதிகளுக்கு இளநீர்

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இந்த வாரமும் இளநீர் பண்ணை விற்பனை விலையை, ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:தமிழகம் முழுவதிலும் கோடை வெயில் கொளுத்துவதால், இளநீர் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம், இதனால், தொடர்ந்து விலை உயர்ந்து வருவதுடன், வடமாநில பகுதிகளுக்கு இளநீர் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் ஒரு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.இன்று, (5ம் தேதி) முதல், ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X