கேரளாவுக்கு பறக்கும் நேந்திரன் வாழை! விலை சரிந்தாலும் அறுவடை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு பறக்கும் நேந்திரன் வாழை! விலை சரிந்தாலும் அறுவடை தீவிரம்

Added : ஏப் 04, 2021
Share
உடுமலை:கேரளா வியாபாரிகள் வருகையால், நேந்திரன் வாழை விற்பனை உடுமலை பகுதியில், சூடுபிடித்துள்ளது.உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நீர் வளம் மிக்க, பகுதிகளில், மட்டும் இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடைக்காக, ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையில், விலை வீழ்ச்சியால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, விற்பனை சந்தை
 கேரளாவுக்கு பறக்கும் நேந்திரன் வாழை! விலை சரிந்தாலும் அறுவடை தீவிரம்

உடுமலை:கேரளா வியாபாரிகள் வருகையால், நேந்திரன் வாழை விற்பனை உடுமலை பகுதியில், சூடுபிடித்துள்ளது.உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நீர் வளம் மிக்க, பகுதிகளில், மட்டும் இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடைக்காக, ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையில், விலை வீழ்ச்சியால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, விற்பனை சந்தை அடிப்படையில், நேந்திரன் வாழையை நடவுக்கு விவசாயிகள் தேர்வு செய்கின்றனர்.
சிப்ஸ் தயாரிப்புக்கு, பயன்படுவதால், நேந்திரன் வாழைக்காய்க்கு, நிலையான விலை அனைத்து சீசனிலும் கிடைக்கும்.அதன்படி, ஏழு குள பாசன பகுதிகளில், இந்த ரக வாழையே கடந்த சீசனில், சாகுபடி செய்யப்பட்டது. கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, கேரளா வியாபாரிகள், கொள்முதலுக்கு வரவில்லை. இதனால், விலை பல மடங்கு சரிந்து, விவசாயிகள் பாதித்தனர். உள்ளூரிலும் போதிய விற்பனை வாய்ப்பு இல்லாமல், கிலோ, 10 ரூபாய் என விலை சரிந்தது. தற்போதைய அறுவடை சீசனில், மறையூர் உட்பட கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது, நேந்திரன் வாழைக்காய், கிலோ, 18 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சில வாரங்கள் முன்பு விலை கிலோ, 30 ரூபாய் வரை இருந்தது.விலை சரிந்தாலும், கோடை கால காற்று துவங்கியுள்ளதால், வாழை மரங்கள், காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், சாயும் வாய்ப்புள்ளது. எனவே, வாழைத்தார்களை உடனடியாக அறுவடை செய்து, விற்பனை செய்ய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு, பெய்த தொடர் மழை காரணமாக, வழக்கமான விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X