பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு விரல் புரட்சி! அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது:நாளை இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கியுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், இறுதி கட்ட பிரசாரத்தில், வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.கொரோனா ஊரடங்குக்கு பின், ஓராண்டு கழித்து தேர்தல் பரபரப்பால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மார்ச், 9ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்

பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கியுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், இறுதி கட்ட பிரசாரத்தில், வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.கொரோனா ஊரடங்குக்கு பின், ஓராண்டு கழித்து தேர்தல் பரபரப்பால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் மார்ச், 9ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மார்ச் 12ல் மனுத்தாக்கல் துவங்கி, 19ல் நிறைவடைந்தது. கடந்த மாதம், 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, 28 நாட்கள் இடைவெளியில் தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு, குறுகிய நாட்களே இருந்ததால், அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் பணிகளை துவங்கி விட்டனர்.
ஐந்து தொகுதிகுறிப்பாக, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கிய, மடத்துக்குளம், உடுமலை, வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தொகுதியிலும், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியில் உள்ளது. உடுமலையில் அ.தி.மு.க., - காங்., கட்சியும், வால்பாறையில் அ.தி.மு.க., - இ.கம்யூ., கட்சியும் பலப்பரீட்சையில் உள்ளது.அமர்க்கள அறிவிப்புகிணத்துக்கடவில், 24 மணி நேரமும் செயல்படும் அதி நவீன மருத்துவமனை, விவசாய விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும். பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், நகராட்சி விரிவுபடுத்தப்பட்டு மாநகராட்சியாகும். தென்னை தொழில்பூங்கா, பல்நோக்கு மாவட்ட தலைமை மருத்துவ மனை, நர்சிங் கல்லுாரி, மருத்துவக்கல்லுாரி, ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும்.
கொப்பரை கொள்முதல் செய்து, எண்ணெய் உற்பத்தி செய்து, சத்துணவுத்திட்டம், ரேஷன் கடையில் வினியோகம் செய்யும் திட்டம். வால்பாறையில் சுற்றுலா மேம்பாடு, தொழிலாளர் சம்பள பிரச்னை, நேரடி நெல் கொள்முதல், மலைவாழ் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.உடுமலையில் ரோடுகள் விரிவாக்கம், புறவழிச்சாலை, நவீன பல்நோக்கு மருத்துவமனை, நகராட்சியை விரிவுபடுத்தி மாநகராட்சியாக்கல்; மடத்துக்குளம் தொகுதியில், அப்பர் அமராவதி திட்டம், தக்காளி சாஸ் தொழிற்சாலை, போன்றவை முக்கிய வாக்குறுதிகளாக வேட்பாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன.பாரபட்சமில்லைஅனைத்து கட்சி வேட்பாளர்களும் எவ்வித பாரபட்சமின்றி, இந்த வாக்குறுதிகளை கிராமங்கள், நகர வார்டுகளில் வீதிவீதியாக சென்று மக்களிடம் விதைத்துள்ளனர். இதுதவிர, அந்தந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி பிரசாரம் செய்துள்ளனர்.
அனைத்து வேட்பாளர்கள் கொடுத்த துண்டுப்பிரசுரங்களை பெற்ற மக்கள், 'எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்,' என, கூறியுள்ளனர். இதற்கிடையே, கடந்த இரு நாட்களாக அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சி சார்பிலும், போட்டி போட்டு, ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர்.முடிவு உங்கள் கையில்தேர்தல் அறிவித்ததுமே, யாருக்கு ஓட்டு போடுவது என்பதை மக்கள் முடிவு செய்துள்ளனர்.
'மைக்' வைத்து கதறி, பாட்டுகள் போட்டு நடந்த பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை, காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.வேட்பாளர்களின் தரம், யார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், யார் வந்தால் வளர்ச்சி பணிகள், மக்களுக்கான திட்டங்கள் நடக்கும் என்பதை பகுத்தாராய்ந்து, வாக்காளர்கள் ஓட்டளித்தால், ஜனநாயகம் மலரும்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X