அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து கனிமொழி பூரண குணமடைய சிறப்பு யாகம்

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பூரண குணமடைய, அரியலுார் கடுகூர் கருப்பையா கோவிலில், நேற்று, அக்கட்சியினர் சிறப்பு யாகம் நடத்தினர். தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுதும், தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.அவருக்கு, கொரோனா தொற்று

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பூரண குணமடைய, அரியலுார் கடுகூர் கருப்பையா கோவிலில், நேற்று, அக்கட்சியினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுதும், தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.அவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், நேற்று முன்தினம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதல் நிலை தொற்று இருப்பதால், டாக்டர்களின் கண்காணிப்பில், சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து கனிமொழி, பூரண குணமடைய வேண்டி, அரசியலுார் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் உள்ள கருப்பையா கோவிலில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது.மாணவரணி துணைச் செயலர் அப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த யாகத்தில், பெண்கள், ஊர் பொது மக்களும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202122:30:53 IST Report Abuse
Sriram V This is how they follow periyarism and atheism
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-ஏப்-202116:42:21 IST Report Abuse
Baskar இதுக்கெல்லாம் யாகம். அதை செய்பவனையும் செய்ய சொன்னவளையும் அதே நெருப்பில் தூக்கி போடவும். திருப்பதிக்கர் லட்டு கொடுத்தவள் ஆயிற்றே இந்த கழட்டும் வருவது சகஜம் தான். பட்டால் தான் தெரியும் பாகவதற்ப்பாடு.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-202104:25:53 IST Report Abuse
Bhaskaran அந்த அம்மா தன்னை தீவிர நாத்திகராக சொல்லி கொண்டு இருக்கிறாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X