பொள்ளாச்சி:'ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு அளியுங்கள்; பாதுகாப்பு கொடுக்க நாங்கள் இருக்கோம்,' என வலியுறுத்தி போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நேற்று நடந்தது.பொள்ளாச்சியில், சட்டசபை தேர்தலுக்காக சில வாரங்களாக அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலையொட்டி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என, விழிப்புணர்வு ஒரு பக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஓட்டுச்சாவடிக்கு ஒட்டு அளிக்க வாருங்கள்; பாதுகாப்பு அளிக்க தயராக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தும் வகையில், போலீசாரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே துவங்கியது.டி.எஸ்.பி., சிவக்குமார் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் மற்றும், எஸ்.ஐ.,க்கள், போலீசார், மத்திய ரிசர்வ் படை போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர்.கொடி அணிவகுப்பானது, ஐயப்பன் கோவில் ரோடு, நகராட்சி அலுவலகம் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நியூஸ்கீம் ரோடு வழியாக பல்லடம் ரோடு தனியார் மண்டபம் அருகே நிறைவடைந்தது.டி.எஸ்.பி., கூறுகையில், ''பொள்ளாச்சி தொகுதியில், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு அளிக்க வேண்டும். 100 சதவீதம் ஓட்டு பதிவாக வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்களிடம் போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது,'' என்றார்.
வால்பாறைவால்பாறையில், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளில் எவ்வித அச்சமுமின்றி ஓட்டுப்பதிவு செய்யவும், அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் கொடிஅணிவகுப்பு நடந்தது. இதில், துணை ராணுவ வீரர்கள், மற்றும் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும், 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய அணிவகுப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, வாழைத்தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்டு வரை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE