அ.தி.மு.க., - தி.மு.க., இறுதி கட்டத்தில் அமர்க்களம்: பொள்ளாச்சி மாவட்டமாக்க இருதரப்பிலும் உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., இறுதி கட்டத்தில் அமர்க்களம்: பொள்ளாச்சி மாவட்டமாக்க இருதரப்பிலும் உறுதி

Added : ஏப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியினர் இறுதிகட்ட பிரசாரத்தில், வாகன பேரணி, நடைபயணம் மேற்கொண்டு, ஓட்டு சேகரித்து அமர்க்களப்படுத்தினர்.பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் துணை சபாநாயகர் ஜெயராமன், நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.வாகன பேரணி சென்று அ.தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகித்து ஓட்டு சேகரித்தனர். பொள்ளாச்சி
 அ.தி.மு.க., - தி.மு.க., இறுதி கட்டத்தில் அமர்க்களம்: பொள்ளாச்சி மாவட்டமாக்க இருதரப்பிலும் உறுதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியினர் இறுதிகட்ட பிரசாரத்தில், வாகன பேரணி, நடைபயணம் மேற்கொண்டு, ஓட்டு சேகரித்து அமர்க்களப்படுத்தினர்.
பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் துணை சபாநாயகர் ஜெயராமன், நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.வாகன பேரணி சென்று அ.தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகித்து ஓட்டு சேகரித்தனர். பொள்ளாச்சி வடக்கிப்பாளையத்தில் நேற்று காலை வாகன பேரணி துவங்கியது.
பேரணியை ஜெயராமன் துவக்கி வைத்தார்.ராமபட்டணம், சின்ன நெகமம், கப்பளாங்கரை பகுதிகளில் வாகன பேரணியும்; வடசித்துாரில், நடைபயண ஊர்வலமும் அ.தி.மு.க.வினர் சென்றனர். வாகன பேரணி செல்ல அனுமதி இல்லாததால், வழக்குப்பதிவு செய்யப்படும், என, போலீசார் தெரிவித்தனர்.மாலையில், மகளிரணி பேரணி மற்றும் கட்சியினர் வாகன பேரணி செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
வார்டுகளில் வாகனங்களில் வலம் வந்த கட்சியினர், புது பஸ்ஸ்டாண்ட் அருகே திரண்டனர்.நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகர விவசாய அணி செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் வந்த ஜெயராமன், ஐந்தாண்டுகளில் செய்துள்ள பணிகள்; மீண்டும் வெற்றி பெற்றதும் செய்ய உள்ள பணிகள் குறித்து பேசினார்.'கொரோனா காலத்தில் மக்களோடு இருந்து, உதவிகளை செய்து கொடுத்தேன். பொள்ளாச்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இத்தேர்தலில் வெற்றி பெற செய்தால், பொள்ளாச்சியை மாவட்டமாக்க பாடுபடுவேன். பொய்யும், புரட்டும் கொண்ட தி.மு.க.,வினரை விரட்டி அடிக்க வேண்டும்,' என பேசினார்.தி.மு.க., பிரசாரம்பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வரதராஜன், நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நேற்று அதிகாலை நடைப்பயிற்சி செய்தபடியே, துவங்கினார்.பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள திரு.வி.க., மார்க்கெட், காந்தி மார்க்கெட் சென்று, வியாபாரிகள், காய்கறி வாங்க வந்த மக்களிடம் பிரசாரம் செய்தார். டி.கோட்டாம்பட்டி சுற்றுப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
தி.மு.க.,வினர் மாலையில் கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து, கூட்டணி கட்சியினருடன் வாகன பேரணியாக புறப்பட்டு, பல்லடம் ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, தாசில்தார் அலுவலக ரோடு, ராஜாமில் ரோடு, திருவள்ளுவர் திடல், கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியே தேர்நிலையை வந்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். வேட்பாளர் வரதராஜன் பேசும் போது, 'பொள்ளாச்சிக்கான வளர்ச்சி பணிகள், பல்நோக்கு மருத்துவமனை, நர்சிங் கல்லுாரி, பொள்ளாச்சி மாவட்டம் போன்ற அறிவிப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு கொடுங்கள்,' என, பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X