சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நார் தொழிற்சாலையில் தீ 4 டிராக்டர், இயந்திரங்கள் சேதம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், நார் உற்பத்தி தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று பகல், 2:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் திடீரென புகை கிளம்பியது. காற்றும் பலமாக வீசியதால், தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலைக்குள் இருந்த ஒட்டு மொத்த தென்னை நாரும் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் இருந்து
 நார் தொழிற்சாலையில் தீ 4 டிராக்டர், இயந்திரங்கள் சேதம்

பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், நார் உற்பத்தி தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று பகல், 2:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் திடீரென புகை கிளம்பியது. காற்றும் பலமாக வீசியதால், தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலைக்குள் இருந்த ஒட்டு மொத்த தென்னை நாரும் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார் எரிந்து சேதமடைந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு டிராக்டர்கள், இயந்திரங்கள் அனைத்தும் தீயில் கருகின. தொழிற்சாலைக்கு வெளியே உலர வைக்கப்பட்டிருந்த நார் மட்டுமே தப்பியது.தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் உற்பத்தியான நார்கள் சேதம் குறித்து,வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X