பறக்கும் படை வாகனத்தில் சென்றவர்களை மடக்கிய மத்திய தேர்தல் பார்வையாளர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை வாகனத்தில் சென்றவர்களை மடக்கிய மத்திய தேர்தல் பார்வையாளர்

Added : ஏப் 04, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை வாகனத்தில் குடும்பத்தினரோடு சென்றவர்களை மத்திய தேர்தல் பார்வையாளர் பிடித்தார். வாகனம் போலீசில் ஒப்படைக்கப்பட்டதோடு டிரைவர் மற்றும் வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கவும் தாசில்தார்கள், துணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை வாகனத்தில் குடும்பத்தினரோடு சென்றவர்களை மத்திய தேர்தல் பார்வையாளர் பிடித்தார். வாகனம் போலீசில் ஒப்படைக்கப்பட்டதோடு டிரைவர் மற்றும் வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கவும் தாசில்தார்கள், துணை கலெக்டர் அளவில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபோன்ற பறக்கும்படை வாகனங்கள் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் பறக்கும் படை லேபிள் ஒட்டப்பட்டு, தேர்தல் பணி, அவசரம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு திருவாடானை தொகுதி தேர்தல் பறக்கும் படை அணி 3- என எழுதப்பட்ட வாகனத்தில், அந்த வாகனத்தின் உரிமையாளர் தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஜோசப் அமலன் நியூட்டன் 48, அவரது குடும்பத்தினர் பெண்கள்உட்பட 9 பேர் முத்துப்பட்டினம் சர்ச்சிற்கு சென்றனர்.இரவு 9:00 மணிக்கு ஊர் திரும்பினர். வழுதுார் ரயில்வே கேட் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சவுரவ் துபே சந்தேகத்தின்பேரில் வாகனத்தை நிறுத்தினார்.

தேர்தல் விதிகளை மீறி பறக்கும் படையினர் பயன்படுத்த வேண்டிய வாகனத்தில் மற்றவர்கள் இருந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்து அனைவரையும் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தார்.அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தல்,ஏமாற்றுதல், தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாகன உரிமையாளர் ஜோசப் அமலன் நியூட்டன், டிரைவர் தேவிப்பட்டினம் அருகே கழனிக்குடியை சேர்ந்த தங்க ஈஸ்வரன் 26, இருவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X