அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அபாயம்டூ | Dinamalar

தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அபாயம்டூ

Added : ஏப் 04, 2021
Share
பரமக்குடி, : பரமக்குடி நகராட்சி பகுதியில் முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காததால் கொரோனா பாதிப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பரமக்குடியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள பல்வேறு தெருக்களும் அடைக்கப்பட்டன.இந்நிலையில் பொதுமக்கள் வெளியே

பரமக்குடி, : பரமக்குடி நகராட்சி பகுதியில் முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காததால் கொரோனா பாதிப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பரமக்குடியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள பல்வேறு தெருக்களும் அடைக்கப்பட்டன.இந்நிலையில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். தற்போது வெளிமாநிலங்கள் உட்பட சென்னை, செங்கல்பட்டு போன்ற நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இச்சூழலில் பரமக்குடிபோன்ற நகரங்களில் உள்ள மக்கள் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் பெரும்பாலும் பணியாற்றி வருகின்றனர்.தற்போது சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.மேலும் கட்சியினர் ஓட்டு சேகரிப்பு நேற்றுடன் முடித்துள்ளனர். ஆனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடைமுறையை மறந்து உள்ளனர்.

தொடர்ந்து பரமக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க., மகளிரணி கனிமொழி உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். பரமக்குடியில் கொரோனா விழிப்புணர்வுஇல்லாமல் மக்கள் உள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடியில் முக கவசம்அணியாதவர்களுக்கு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் இதனை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X