பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான 4 தொகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணி

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: 'சென்னையில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள, நான்கு தொகுதிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 360 வாக்காளர்கள் ஓட்டுளிக்க உள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற, 35 ஆயிரம்

சென்னை: 'சென்னையில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள, நான்கு தொகுதிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 360 வாக்காளர்கள் ஓட்டுளிக்க உள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற, 35 ஆயிரம் பணியாளர்களும், பாதுகாப்பு பணியில், 10 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், வட சென்னையில் உள்ள, நான்கு தொகுதிகள் பதற்றமானவை என்றும், ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும், உளவுத் துறை எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையில், 577 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை; 30 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு, போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல், வட சென்னை பகுதியில் மிகவும் பதற்றமானவையாக, உளவுத் துறை எச்சரித்துள்ள, நான்கு தொகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் தவிர்க்கும் வகையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன.இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:ஓட்டுப்பதிவு நாளன்று, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 'கேமரா'க்கள் வாயிலாக கண்காணிக்கப்படும். மேலும், சீருடை அணியாத போலீசார், உளவுத் துறை ஆகியோர் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவர். குறிப்பாக, மாலை நேரங்களில், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் இருப்பதால், அதற்கேற்ப தடுப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது மக்கள், எவ்வித அச்சமின்றி ஓட்டுளிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X