பொது செய்தி

தமிழ்நாடு

அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! இரு தொகுதிகளிலும் இறுதி கட்ட பரபரப்பு

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், அனல் பறந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றது.உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என, ஒவ்வொரு தொகுதியிலும், தலா, 15 பேர் களத்தில் உள்ளனர்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நகரம், மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் என வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர்.
 அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! இரு தொகுதிகளிலும் இறுதி கட்ட பரபரப்பு

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், அனல் பறந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றது.உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என, ஒவ்வொரு தொகுதியிலும், தலா, 15 பேர் களத்தில் உள்ளனர்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நகரம், மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் என வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர். பிரசார வாகனங்கள் இரைச்சல், எல்.இ.டி., திரையில் பிரசாரம், வி.ஐ.பி.,க்கள் பிரசார பொதுக்கூட்டங்கள், வேன் பிரசாரம் என, கடந்த 3 வாரமாக தேர்தல் பிரசாரம் களை கட்டியது.நாளை (6ம் தேதி), ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று மாலை, 7:00 மணியுடன் பிரசாரம் நிறைவு செய்ய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது.
இறுதி நாள் பிரசாரத்தில், கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் பரபரப்பாக ஈடுபட்டு வந்தனர். உடுமலை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் நிறைவு செய்தார்.காங்., வேட்பாளர் தென்னரசு, தாராபுரம் ரோடு பகுதியில் நிறைவு செய்தார். அதே போல், பல்வேறு கட்சியினர் ரோடுகளில், வாகனங்களில் வந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன், பஸ் ஸ்டாண்டிலும், தி.மு.க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், அ.ம.மு.க., சண்முகவேலு ஆகியோர் நால் ரோட்டிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X