கீழக்கரை : மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
ஏர்வாடி அருகே சடைமுனியன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் முருகராஜா இவரது மகன் தினேஷ் 18. நேற்று முன்தினம் மாலை.5:30 மணி அளவில் மீன்பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில், தனி நபராக துாண்டிலுடன் சின்ன ஏர்வாடி மன்னார்வளைகுடா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். பேரலையில் சிக்கிய மீனவர் தினேஷ் கடலுக்குள் விழுந்து மூச்சுத்திணறி பலியானார்.
நேற்று காலை 9:00 மணியளவில் அவரது உடல் சின்ன ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கியது. மெரைன் எஸ்.ஐ., கணேசமூர்த்தி, போலீசார்மதி, ஆனந்த குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE