மிதவையில் மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிதவையில் மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலி

Added : ஏப் 04, 2021
Share
கீழக்கரை : மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.ஏர்வாடி அருகே சடைமுனியன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் முருகராஜா இவரது மகன் தினேஷ் 18. நேற்று முன்தினம் மாலை.5:30 மணி அளவில் மீன்பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில், தனி நபராக துாண்டிலுடன் சின்ன ஏர்வாடி மன்னார்வளைகுடா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். பேரலையில் சிக்கிய

கீழக்கரை : மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

ஏர்வாடி அருகே சடைமுனியன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் முருகராஜா இவரது மகன் தினேஷ் 18. நேற்று முன்தினம் மாலை.5:30 மணி அளவில் மீன்பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில், தனி நபராக துாண்டிலுடன் சின்ன ஏர்வாடி மன்னார்வளைகுடா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். பேரலையில் சிக்கிய மீனவர் தினேஷ் கடலுக்குள் விழுந்து மூச்சுத்திணறி பலியானார்.

நேற்று காலை 9:00 மணியளவில் அவரது உடல் சின்ன ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கியது. மெரைன் எஸ்.ஐ., கணேசமூர்த்தி, போலீசார்மதி, ஆனந்த குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X