பொது செய்தி

தமிழ்நாடு

11 ரக ஒதுக்கீடு அமல்படுத்த கைத்தறி சங்கங்கள் கோரிக்கை

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பரமக்குடி : கைத்தறி நெசவுத் தொழிலில் 11 ரக ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என, பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடியில் 80க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் இயங்கி வருகிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள் தொழில் செய்கின்றனர்.இந்நிலையில் கைத்தறி ரகங்களை போன்றே,

பரமக்குடி : கைத்தறி நெசவுத் தொழிலில் 11 ரக ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என, பரமக்குடி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் 80க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் இயங்கி வருகிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள் தொழில் செய்கின்றனர்.இந்நிலையில் கைத்தறி ரகங்களை போன்றே, விசைத்தறியிலும் சேலைகள் நெய்யப்படுகிறது. இதனால் கைத்தறி சேலைகளை விட, விசைத்தறி ரகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு 11 ரகங்கள் கைத்தறியில் மட்டும் உற்பத்தி செய்ய ஒதுக்கப்பட்டது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனையடுத்து கைத்தறி சேலை ரகங்கள் விலை அதிகம் என்பதால், விற்பனை செய்ய முடியாமல் சங்கங்கள் தவிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து பாரதிய மஸ்துார் சங்க பொருளாளர் காசிவிஸ்வநாதன் கூறியபோது, கைத்தறி ரக ஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் கடந்த மாதம் சேலம் மாவட்ட கலெக்டர் 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள்மீது ஆறுமாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆகவே இந்த நடைமுறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X