சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறுதி கட்ட பிரசாரத்தில் மோதல்: போலீஸ் சொதப்பலால் பதற்றம்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நகரில் பேரணி நடத்த அ.தி.மு.க., - தி.மு.க., இரு தரப்பினரும் அனுமதி கோரியிருந்தனர். இரு தரப்பினரும் பேரணி நடத்த வழித்தடம், கூட்டத்தை நிறைவு செய்யும் இடங்கள் ஆகியவற்றை, போலீசார் முடிவு செய்தனர். இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டு, விரும்பத்காத சம்பவங்கள் நடக்க கூடாது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நகரில் பேரணி நடத்த அ.தி.மு.க., - தி.மு.க., இரு தரப்பினரும் அனுமதி கோரியிருந்தனர். இரு தரப்பினரும் பேரணி நடத்த வழித்தடம், கூட்டத்தை நிறைவு செய்யும் இடங்கள் ஆகியவற்றை, போலீசார் முடிவு செய்தனர். இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டு, விரும்பத்காத சம்பவங்கள் நடக்க கூடாது என்பற்காக, வெவ்வேறு வழித்தடங்கள், இடங்களை ஒதுக்கி இருந்தனர். ஆனால், நேற்று நடந்த இரு தரப்பு பேரணிகளும், கிழக்கு - மேற்கு ராஜா மில் ரோட்டில் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். இருதரப்பும் மாற்றி மாற்றி கோஷமிட, நிலைமை சூடானது. மோதல் பேச்சால், கட்சியினரிடையே பதற்றம் ஏற்பட்டது. ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் அலட்சியத்தால், இரு கட்சியினரும் எதிரெதிராக சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.உடனடியாக கட்சி நிர்வாகிகள், போலீசார் இரு கட்சியினரையும் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால், மோதல் இல்லாமல் சுமூகமாக கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X