பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிேஷார்

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிேஷார் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதே போல் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். நேற்று மீனவர் பகுதிகளுக்கு சென்றேன். சர்ச்சில் சந்தித்து அவர்களின் குறைகளை

ராமநாதபுரம் : தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிேஷார் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதே போல் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். நேற்று மீனவர் பகுதிகளுக்கு சென்றேன். சர்ச்சில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டேன்.கச்சத்தீவு பிரச்னை, சுருக்குமடி, மீன்பிடி தடைகாலத்தில் உதவித்தொகை வழங்குதல், மீன் பிடி வலைகள் வழங்குதல் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மீனவர்களின் நலனுக்காக மோடி அரசு பல திட்டங்களை தீட்டியுள்ளது. அந்த வகையில் மிக முக்கியமான இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.இதுவரை 2000 மீனவர்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு காப்பாற்றியுள்ளோம். மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். எப்படி 'ஸ்மார்ட் சிட்டி' இருக்கிறதோ, அதுபோல் 'ஸ்மார்ட் வில்லேஜ்' என்ற பெயரில் மீனவர் கிராமங்களை முன்னேற்றவும், தேவையான வசதிகளையும் செய்து கொடுப்போம்.

மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் மூலம் கடல் கூண்டு மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பின் மூலம் மீனவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் திட்டங்களை அமல்படுத்துவோம். கடல் பாசி மூலம் 20 மில்லியன் டாலர் ஏற்றுமதிசெய்யும் அளவிற்கு தமிழகத்தில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X