ஓட்டுப்பதிவுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி (ஜி.சி.டி.,) வளாகத்தை, தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ ஆய்வு செய்தார்.கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் பதிவாகும் ஓட்டுகள், ஜி.சி.டி.,யில் எண்ணப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' பத்திரப்படுத்தப்பட்டு, அரசியல் கட்சி ஏஜன்ட்டுகள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்படும்.மே, 2 வரை, 24 மணி நேரமும் 'ஷிப்ட்' முறையில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். 'சிசி டிவி' கேமரா பொருத்தி, மெகா சைஸ் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கைக்கு ஏஜன்ட்டுகள் வருவதற்கு தனி வழி, அலுவலர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்படுகிறது. இப்பணிகளை, தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ, மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில், ஜன்னல்கள் மூடப்பட்டு, குறுக்காக மரச்சட்டங்களால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா, அத்துமீறி உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என, ஆய்வு செய்தனர் - நமது நிருபர் -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE