தேர்தல் ஆணையத்தில் இருந்து மேலும் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டதால், நேற்று விடுமுறையின்றி, தபால்காரர்கள் வினியோக பணியில் ஈடுபட்டனர்.புதிய வாக்காளர்களுக்கு தபால் வாயிலாக வாக்காளர் அட்டைகள் நடப்பாண்டு நேரடியாக வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் புதிய வாக்காளர் அட்டைகள், தபால் வாயிலாக மார்ச் இறுதியிலேயே, வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி சென்னை தேர்தல் கமிஷனிலிருந்து, புதிதாக வாக்காளர் அட்டைகள், கோவை தலைமை தபால்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அங்கிருந்து, சம்பந்தப்பட்ட பட்டுவாடா தபால்நிலையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்ட அட்டைகள், விடுமுறை நாளான நேற்றும் வினியோகிக்கப்பட்டன. மீதமுள்ள அட்டைகள் இன்று முழுமையாக வினியோகம் செய்யப்படும் என, தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் - நமது நிருபர் -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE