திருவாடானை, : ஓட்டுப்பதிவின் போது கொரோனா பரவாமல் இருக்க வாக்காளர்களை முறைப்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை (ஏப்.6) நடைபெறுவதை முன்னிட்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:திருவாடானை தாலுகாவில் தொண்டி, வெள்ளையபுரம், மங்களக்குடி, திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 22 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.
ஓட்டுப்பதிவின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து சுகாதாரத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரு தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், இடைவெளி விட்டு வரிசையாக நிற்பது, ஓட்டுபதிவின் போது கையுறை அணிதல் போன்றவைகள் குறித்து வாக்காளர்களிடம் தெரிவித்து அதன்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். முகக்கவசம் அணியாமல் ஓட்டுச்சாவடி சென்றால் ஓட்டுப்போட முடியாது. ஆகவே வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE