பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மீன்பிடிப்பு ரத்து

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : தினமலர் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து ஏப்.,5ல் மீன்பிடிக்க செல்வதில்லை என தீர்மானித்தனர்.100 சதவீத ஓட்டு பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அனுமதித்தது.ஏப்., 6ல் மீனவர்கள் அனைவரும் ஓட்டு போட

ராமேஸ்வரம் : தினமலர் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து ஏப்.,5ல் மீன்பிடிக்க செல்வதில்லை என தீர்மானித்தனர்.

100 சதவீத ஓட்டு பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அனுமதித்தது.ஏப்., 6ல் மீனவர்கள் அனைவரும் ஓட்டு போட முடியாத சூழல் எழும் என்பதால் 100 சதவீதம் ஓட்டு பதிவு கேள்வி குறியாகும் என நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வந்தது.

இதனையறிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தாமாக முன்வந்து இன்று (ஏப்.,5) மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்தனர்.ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலாளர் சகாயம் கூறுகையில், 100 சதவீதஓட்டுபதிவு குறித்து தினமலர் சுட்டி காட்டியதால் இன்று ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை என தீர்மானித்துள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X