அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆட்சி மாற்றமே தமிழகத்திற்கு விடிவு' : காங்., தலைவர் கே.எஸ். அழகிரி

Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'ஆட்சி மாற்றத்தின் வாயிலாகவே, தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியில், 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2020ம் ஆண்டில் மட்டும், 13 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, மூன்று மடங்கு; அதானியின் சொத்து மதிப்பு, ஆறு மடங்கும் உயர்ந்துஇருக்கிறது. பிரதமர்

சென்னை: 'ஆட்சி மாற்றத்தின் வாயிலாகவே, தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியில், 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2020ம் ஆண்டில் மட்டும், 13 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, மூன்று மடங்கு; அதானியின் சொத்து மதிப்பு, ஆறு மடங்கும் உயர்ந்துஇருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி, கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். இந்தியாவில் உள்ள கார்ப்பரேட்டுகள், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 2020ல் மொத்தம் வழங்கிய நன்கொடை, 2,773 கோடி ரூபாய். இதில், 1,660 கோடி ரூபாய் பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் பா.ஜ.,வுக்கு நன்கொடை வாரி வழங்குவது ஏன் என, பிரதமர் மோடி பதில் கூறுவாரா. மத்திய அரசின் பிடியில் இருந்து, தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சியான அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் வாயிலாகவே, தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202122:32:16 IST Report Abuse
Sriram V True you looted the country in the name of secularism
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X