ராமநாதபுரம் : நாளை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ராமநாதபுரம், பரமக்குடி(தனி), முதுகுளத்துார், திருவாடானை தொகுதிகளில் 1647 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. இதில் 80 இடங்களில் 228 மையங்கள்பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடி பாதுகாப்புப் பணியில் 412 துணை ராணுவ வீரர்கள், 1900 உள்ளூர் போலீசார், 275 ஓய்வு ராணுவ வீரர்கள், 22 ஓய்வு போலீஸ் அதிகாரிகள், தெலுங்கானா பயிற்சி போலீசார் 50 பேர், உள்ளூர் ஊர்க்காவல்படையினர் 345, பெங்களூரு ஊர்க்காவல் படையினர் 100 பேர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 200 பேர் என 3304 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு நேற்று காலை பட்டணம்காத்தான் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. தொகுதி வாரியாக போலீசார் ஒதுக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE