அடிப்படை வசதி கேட்டு போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கேட்டு போராட்டம்

Added : ஏப் 04, 2021
Share
கமுதி : முதுகுளத்துார் தொகுதி கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.கமுதி ஒன்றியம் கோடாங்கிபட்டி கிராமம் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளது. இக்கிராமத்தில் சாலை பிரச்னை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.கிராமமக்கள் அத்தியாவசியபொருட்கள் வாங்குவதற்கும், மாணவர்கள்

கமுதி : முதுகுளத்துார் தொகுதி கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கமுதி ஒன்றியம் கோடாங்கிபட்டி கிராமம் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளது. இக்கிராமத்தில் சாலை பிரச்னை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.கிராமமக்கள் அத்தியாவசியபொருட்கள் வாங்குவதற்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு செல்வதற்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களில் செல்கின்றனர்.கிராமத்தில் அடிப்படை வசதி ஏதும் இல்லாததால் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து கமுதி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X