அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வால் இந்த முறை மக்களை ஏமாற்ற முடியாது'

Added : ஏப் 04, 2021
Share
Advertisement
சென்னை: ''லோக்சபா தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றியது போல, இந்த முறை தி.மு.க.,வால் ஏமாற்ற முடியாது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் பேசினார். த.மா.கா., தலைவர் வாசன் சென்னையில் நேற்று, ஆவடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியராஜன், மயிலாப்பூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் நட்ராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில், 10

சென்னை: ''லோக்சபா தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றியது போல, இந்த முறை தி.மு.க.,வால் ஏமாற்ற முடியாது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் பேசினார்.

த.மா.கா., தலைவர் வாசன் சென்னையில் நேற்று, ஆவடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியராஜன், மயிலாப்பூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் நட்ராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில், 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., வெற்றிகரமான ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகம் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

நீர் மேலாண்மை, உணவு தானிய உற்பத்தி, கொரோனா நோய் கட்டுப்படுத்துதல் என, அனைத்திலும், மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முதல் மாநிலமாக, முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதி பெற்ற மாநிலமாக விளங்குகிறது. மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது. எனவே, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும்.தி.மு.க., மக்களிடம், வடிகட்டிய பொய்யை சொல்லி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், நகை கடன் தள்ளுபடி போன்ற பொய்யான வாக்குறுதிகளை கூறி, ஏமாற்றி ஓட்டு வாங்கியது. இந்த முறை அப்படி மக்களை ஏமாற்ற முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X