சென்னை: 'தமிழகத்தில் நல்லாட்சி தொடர, அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணிக்கு ஓட்டு அளிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், இந்த தேர்தலுக்கான பிரசாரம், நான்கு மாதங்களுக்கு முன் துவங்கிவிட்டது. இத்தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு கட்சியின் தலைவரும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர். இதுவரை நடைபெற்றது பிரசார காலம். நேற்று மாலை, 7:00 மணி முதல், நாளை மறுநாள் ஓட்டுச்சாவடிக்கு சென்று, நீங்கள் ஓட்டளிப்பது வரையிலான காலம் தான், தமிழகத்தின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிப்பதற்கான சிந்தனை காலம்.தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய, தேர்தல் அன்று அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றிபெற செய்ய வேண்டும். அதன் வாயிலாக, தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE