பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் முக கவசம் அணியாதவர்களிடமிருந்து, 89 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.பெரியநாயக்கன் பாளையத்தில் வீரபாண்டி பிரிவு, பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த, 7 நாட்களாக முக கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்களில் வந்த, 170 பேரிடம் தலா, 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, தடாகம் ரோடு ஆகிய பகுதிகளில் 200 பேருக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய் ஆகிய பகுதிகளில் 75 பேரிடம் தலா, 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.போலீசார் கூறுகையில்,' முக கவசம் அணியாமல் வருபவர்களிடம், அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். தொற்று பரவலை தடுக்க, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE