இது நல்ல ஐடியா!
'ஆட்சியை தக்க வைப்பதற்கு கொரோனா பரவல் உதவினால் கூட சரி தான்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார், மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே. மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அரசியலின் அத்தனை விதமான மரபுகளையும் உடைத்தெறிந்து, பா.ஜ., முதுகில் குத்தி, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார் உத்தவ்.
ஆனால், புதிதாக சேர்ந்த கூட்டணி கட்சிகள், அவரை நிம்மதியாக ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் படுத்தி எடுக்கின்றன. தேசியவாத காங்., மூத்த தலைவரும், மாநில உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக், ஊழல் குற்றச்சாட்டில் வசமாக சிக்கியுள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்கும்படி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கி வருகின்றன; தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. அவரை பதவி நீக்கம் செய்தால், தேசியவாத காங்., கட்சியின் கோபத்தை சந்திக்க நேரிடும். ஆட்சி கவிழ்ந்தாலும் கவிழலாம். இதனால், என்ன செய்வது என, தெரியாமல் தவிக்கிறார் உத்தவ் தாக்கரே.
இந்த நேரத்தில் தான், மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. உத்தவ் தாக்கரேவை சந்தித்த அவரது விசுவாசிகள், 'கொரோனாவை காரணமாக வைத்து, முழு ஊரடங்கை அறிவித்து விடுங்கள். எதிர்க்கட்சியினர் வீடுகளுக்குள் முடங்கிவிடுவர். ஆட்சிக்கும் ஆபத்து இருக்காது' என, யோசனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 'இதுவும் நல்ல 'ஐடியா'வாகத் தான் இருக்கிறது' என, தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளார் உத்தவ் தாக்கரே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE