பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், கேரளாவில் நாளை சட்டசபை தேர்தல் இரட்டை ஓட்டுப்பதிவை தடுக்க எல்லைகள் மூடல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கம்பம்: தமிழகம், கேரளவில் நாளை(ஏப்.,6) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்கள் இரு இடங்களில் ஓட்டுப்பதிவு செய்வதை தடுக்க இருமாநில எல்லைகள் இன்று மாலை 5:00 மணி முதல் நாளை இரவு 7:00 மணி வரை மூடப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழகம், கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. இரட்டை ஓட்டுரிமை பெற்றுள்ள

கம்பம்: தமிழகம், கேரளவில் நாளை(ஏப்.,6) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்கள் இரு இடங்களில் ஓட்டுப்பதிவு செய்வதை தடுக்க இருமாநில எல்லைகள் இன்று மாலை 5:00 மணி முதல் நாளை இரவு 7:00 மணி வரை மூடப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழகம், கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. இரட்டை ஓட்டுரிமை பெற்றுள்ள இவர்கள் இரு மாநிலங்களிலும் ஓட்டளிக்கலாம். இதை தடுக்கும் வகையில் தமிழக-கேரளா எல்லைகளான கம்பமெட்டு, குமுளி, போடிமெட்டு பாதைகள் இன்று மாலை 5:00 மணி முதல் நாளை இரவு 7:00 மணி வரை மூடப்படுகிறது. இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சோதனைக்கு பிறகு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.மேலும் சாக்குலுாத்து மெட்டு, ராமக்கல்மெட்டு ரோடு, கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் தேவாரம் பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல பாதைகள் உள்ளன. இங்கும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

விவசாயிகள் எதிர்ப்புஎல்லைகள் மூட தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு செய்தவர்கள் விவசாய பணிகளுக்காக தங்கள் விளைநிலங்களுக்கு எல்லை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X