அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் அருகே எல்லிங்க நாயக்கன்பட்டி முருகன் கோயிலில் பாண்டியர்கள் கால கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கோயிலில் பழைய கல்வெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், மதுரை அருண், அழகப்பா பல்கலை கல்வெட்டு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அக்கோயிலின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த 15 துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாவது: இக்கோவில் 13ம் நுாற்றாண்டை சேர்ந்தது. பிற்கால பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்டது. முருகன் கோயில் அமைக்கும் வழக்கம் 700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இக் கோயிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே கல்வெட்டாக இருந்திருக்க வேண்டும். பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. கோயிலை சீரமைக்கும் போது கல்வெட்டுகள் இடம் மாறி போயிருக்கலாம்.
இந்த கல்வெட்டுகளில் அரசரின் பெயர் இல்லை. ஒரு கல்வெட்டில் மட்டும் திரிபுவன சக்கரவர்த்திகள் என்று உள்ளது. அடுத்தடுத்த எழுத்துக்கள் சிதைந்து உள்ளதால் எந்த அரசர் என்று அறிய முடியவில்லை. இக்கோயிலுக்கு நிலதானம் கொடுத்ததையும், கோயில் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது குறித்தும் கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் அமைப்பை பார்க்கும் போது பிற்கால பாண்டியர் கல்வெட்டு என்று உறுதியாக கூறலாம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE