சிவகாசி : சிவகாசி வெம்பக்கோட்டை ரோடு சரஸ்வதி பாளையத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஈஸ்வரன் 48, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமரேஷ் ரூ. 50 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி கணேசன் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாரனேரி நடுத்தெருவில் அ.தி.மு.க.,வை சேர்ந்த காசிராஜன் 44, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்தார். அவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் ரூ.10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தார். மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அருப்புக்கோட்டை: சொக்கலிங்கபுரம் ஜவஹர் சங்கம் தெருவை சேர்ந்தவர் அ.தி.மு.க., கிளை செயலாளர் சொக்கலிங்கம் 68. இவரது வீட்டில் தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் மகேஷ்வரி ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை செய்து ரூ. 47 ஆயிரம், வாக்காளர் பட்டியலை கைப்பற்றினர்.டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE