அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் மீது அனிதா சகோதரர் புகார்

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெரம்பலுார்: 'என் தங்கை மரணத்தை கொச்சைப்படுத்திய அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரியலுார் அனிதாவின் சகோதரர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் மீது, அரியலுார் எஸ்.பி., பாஸ்கரனிடம், அனிதாவின் அண்ணன் மணிரத்னம், அளித்துள்ள புகார்:என் தங்கை அனிதா பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள்

பெரம்பலுார்: 'என் தங்கை மரணத்தை கொச்சைப்படுத்திய அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரியலுார் அனிதாவின் சகோதரர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் மீது, அரியலுார் எஸ்.பி., பாஸ்கரனிடம், அனிதாவின் அண்ணன் மணிரத்னம், அளித்துள்ள புகார்:என் தங்கை அனிதா பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள் பெற்றார். திடீரென, 'நீட்' தேர்வை திணித்ததன் காரணமாக மருத்துவர் ஆக வேண்டும் என்ற தன் கனவு சிதைந்ததால், மன அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்து கொண்டார்.என் தங்கையின் இறப்பு நீட் தேர்வுக்கு எதிராகவும், அது ஏழை மக்களை எவ்வாறு பாதிக்கும் என்றும் கண்டனங்கள் தெரிவித்ததை தமிழக மக்கள் அறிவர்.

இந்நிலையில், அமைச்சரும், அ.தி.மு.க., வேட்பாளருமான பாண்டியராஜன், இறந்து போன என் தங்கை அனிதா பேசுவதாக சித்தரித்து தவறான வீடியோ ஒன்றை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். இது ஐ.டி., 'ஆக்ட்' 2000ன்படி குற்றமாகும். அவர் பதிவிட்ட அந்த வீடியோ, அனிதாவின் இறப்பை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. இது, அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக, எங்கள் குடும்பத்தினரின் சம்மதம் இன்றி அனிதா படம், வீடியோவை பயன்படுத்தி இருப்பது குற்றம்.வாக்காளர்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேட்பாளர் பாண்டிய ராஜனை தகுதி நீக்கம் செய்யுமாறு, மாநில தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளேன். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-202122:34:41 IST Report Abuse
Sriram V I am sure she is instigated by Dhirudargal munnetra kalagam and Vettipaya chiruthaigal kalavani katchi.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-202119:39:23 IST Report Abuse
Bhaskaran அதேபோல் உங்க தங்கை மரணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுக வாயும் கண்டிப்பீங்களா
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-ஏப்-202102:22:34 IST Report Abuse
Baskar அனிதாவின் மரணம் அடங்க முடியாத ஆத்திரமாக தான் உள்ளது. என்ன செய்வது எல்லாமே விதி அந்த மட்டுமா இறந்தால் அவருடன் இறந்த அந்த 13 குழந்தைகளும் பரிதாபத்திற்கு உள்ளவர்கள் தான். அவர்கள் இறந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. இப்போது பொய் தி.மு.க அரசியலுக்கு பயன் படுத்துவது அநாகரிகம். இவர்கள் யார் வீட்டிலும் எழவு விடக்கூடாது. ஆரோ.முந்நூறு ரூபாய்க்கு மாலையை வாங்கி போட்டுவிட்டு வருவார்கள். இந்த கூட்டத்தில் அனிதாவின் அன்னான் ஒரு தி.மு.க.அனுதாபி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X