தமிழ்நாடு

ஓட்டு சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை; இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி அவசியம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
காரியாபட்டி : இரண்டாவது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை நடக்கும் ஓட்டுப்பதிவின் போது ஓட்டு சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பது அவசியமாகிறது.மாவட்டத்தில் ஏழு தொகுதிகள் 2, 370 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு, தலைமை அலுவலர், ஓட்டு சாவடி அலுவலர்கள்,

காரியாபட்டி : இரண்டாவது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை நடக்கும் ஓட்டுப்பதிவின் போது ஓட்டு சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பது அவசியமாகிறது.

மாவட்டத்தில் ஏழு தொகுதிகள் 2, 370 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு, தலைமை அலுவலர், ஓட்டு சாவடி அலுவலர்கள், களப்பணியாளர்கள் என 11 ஆயிரத்து 376 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிந்து, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஓட்டுப்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரண்டாவது அலையாக கொரோனா வேகமாக பரவி வருகிறது.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மின்னனு ஓட்டு இயந்திரத்தை தொட்டு ஓட்டு அளிக்கும் போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க அனைத்து ஓட்டு சாவடிகளிலும் கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை, உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் உபகரணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்துவது கண்துடைப்பாக இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

தொற்று பரவலை தடுங்க

ஓட்டு சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது அவசியம். உடல் வெப்ப பரிசோதனை, கைகளில் கிருமி நாசினி தடவிக் கொள்வது அவசியம். இதை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வாக்காளர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒத்துழைப்பு தரவேண்டும். இதனால் மற்றவர்களுக்கும் தொற்று பரவுவதை தடுக்க இயலும்.செந்தில்குமார், சமூக ஆர்வலர், காரியாபட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X