பொது செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் விஜயபாஸ்கர் உருக்கம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை: ''என் மரணத்திற்கு பின், 11 உயிர்கள் காப்பாற்றப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர், தொகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:நான், 15 ஆண்டுகளுக்கு முன்பே, என் மரணத்திற்கு பின், உடல்

புதுக்கோட்டை: ''என் மரணத்திற்கு பின், 11 உயிர்கள் காப்பாற்றப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர், தொகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:நான், 15 ஆண்டுகளுக்கு முன்பே, என் மரணத்திற்கு பின், உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்து விட்டேன். இதனால், என் மரணத்திற்கு பின், 11 உயிர்கள் காப்பாற்றப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது, என் ரத்தத்தில் ஊறிய ஒன்று.நான், என்னையே விராலிமலை சட்டசபை தொகுதிக்கு கொடுத்துள்ளேன்.

மக்களுக்காக, என்ன வேண்டுமானாலும் செய்வேன்.என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை, என் உயிர் இருக்கும் வரை, உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.விராலிமலை தொகுதியில், பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து, தொகுதியை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்ல, நீங்கள் எல்லாம் என்னை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X