விருதுநகர் சர்ச்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர் சர்ச்களில் ஈஸ்டர் கொண்டாட்டம்

Added : ஏப் 05, 2021
Share
விருதுநகர் : விருதுநகரில் கிறிஸ்தவ சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம், நள்ளிரவு ஆராதனைகள் நடந்தன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்ந்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் உயிர்ப்பு விழாவாக சர்ச்களில் கொண்டாடி வருகின்றனர்.ஈஸ்டர் நாளான நேற்று விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் மறைவட்ட அதிபர் பாதிரியார் பெனடிக்ட்

விருதுநகர் : விருதுநகரில் கிறிஸ்தவ சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம், நள்ளிரவு ஆராதனைகள் நடந்தன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்ந்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் உயிர்ப்பு விழாவாக சர்ச்களில் கொண்டாடி வருகின்றனர்.ஈஸ்டர் நாளான நேற்று விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் மறைவட்ட அதிபர் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணை பாதிரியார் சந்தியாகப்பன் தலைமையில், பாண்டியன்நகர் சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஸ்டீபன் சேவியர், கோவை கப்புச்சின் சபை இளங்குருமட இயக்குனர் பாதிரியார் அந்தோணிராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து தலைமையில், நிறைவாழ்வுநகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில், ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ், துணை பாதிரியார் பென்சிகர், சாத்துார் ஒத்தையால் குழந்தை ஏசு சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி தாளாளர் ஜெரி லுாயிஸ், பொருளாளர் வின்சென்ட் தலைமையில் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு விழா திருப்பலி, மறையுரை நடந்தது. பாண்டியன் நகர் மாற்கு சர்ச்சில் உதவி குரு எட்வர்ட் தவதுரை தலைமையில், சி.எஸ்.ஐ., யோவான் சர்ச்சில் அதிகாலை போதகர் ஜோ டேனியல் தலைமையில் சிறப்பு ஆராதனையும், வழிபாடும் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X