புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மலைப் பாம்பை, பயமின்றி கையில் துாக்கினார்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி வனத் துறை வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, வனத்துறை யின் காட்டை சுற்றி பார்த்தார். வனத்துறை வளாகத்தில் உள்ள வன விலங்கு மீட்பு வளாக கட்டடத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மலைப் பாம்பை கையில் துாக்கி மகிழ்ந்தார். காயமடைந்திருந்த கழுகையும் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். 'வனத்துறை வளாகம் இயற்கையான காடு போன்று உள்ளது. வன விலங்கு மீட்பு நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களை கவர்னர் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE